“சபாஷ் ரஜினிகாந்த்.. அப்படி வாங்க..” - கமல்ஹாசன் வரவேற்பு

“சபாஷ் ரஜினிகாந்த்.. அப்படி வாங்க..” - கமல்ஹாசன் வரவேற்பு
“சபாஷ் ரஜினிகாந்த்.. அப்படி வாங்க..” - கமல்ஹாசன் வரவேற்பு
Published on

டெல்லி வன்முறை குறித்த ரஜினிகாந்தின் கருத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் கருத்துதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், “சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை. வருக, வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று சென்னை போயஸ்கார்டன் சாலையில் தன் வீட்டுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் "டெல்லியில் ஏற்பட்ட போராட்டத்திற்கு (வன்முறை) உளவுத் துறையின் தோல்வியே காரணம்; அதற்காக மத்திய அரசைக் கண்டிக்கிறேன். ட்ரம்ப் போன்ற தலைவர்கள் வந்திருக்கும் நேரத்தில் இந்த வன்முறை நிகழ்ந்து இருக்கக் கூடாது. மேலும் மதத்தை வைத்து அரசியல் செய்வதையும் வன்மையாக கண்டிக்கிறேன். சிஏஏ போராட்டத்தை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும். வன்முறையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்; இல்லையென்றால் ராஜினாமா செய்ய வேண்டியதுதான். போராட்டம் எப்போதும் வன்முறையாக மாறக் கூடாது, அமைதியாக நடைபெறலாம்" என்றார்.

இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று கூறினீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த் "சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக முதல்ஆளாக நிற்பேன் என்றுதான் கூறினேன்" என தெரிவித்தார். மேலும் தொடர்ந்த ரஜினிகாந்த் "சிஏஏ நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாகிவிட்டது. எனக்கு தெரிந்தவரை சிஏஏ திரும்ப பெறமாட்டாது, எவ்வளவு போராடினாலும் பயனில்லை என்றே தோன்றுகிறது" என்றார்.

மேலும் தொடர்ந்த ரஜினிகாந்த் "என்ன உண்மையோ அதை சொல்கிறேன்; என் பின்னால் பாஜக இருப்பதாக கூறுவது வருத்தமளிக்கிறது" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com