தமிழ்நாட்டில் கடந்த 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திமுக தலைமை ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமித்தது. இந்நிலையில், கரூர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை வழக்கில் சிறையில் உள்ளார்.
இதையடுத்து கரூர் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளராக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா நியமிக்கப்பட்டார்.
தேர்தல் பணிகளுக்காக கரூர் மாவட்ட பொறுப்பாளராக தலைவர் அவர்கள் என்னை அறிவித்தார். சகோதரர் செந்தில்பாலாஜி நிர்வகித்த மாவட்டம்! அவரது கட்சி பணிகள் உலகறியும்!! அந்த இடத்திற்கு என் மீது நம்பிக்கை வைத்து அனுப்பிய தலைவர் அவர்களுக்கும், பரிந்துரைத்த கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், சகோதரர் செந்தில்பாலாஜி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
“திடீர் என்று எங்கிருந்தோ ஒருவன் வந்து நம்மை வேலை வாங்குவதா” என்று கொஞ்சமும் எண்ணாமல் நான் ஒருங்கிணைத்த அத்தனை பணிகளையும் உடனுக்குடன் செய்து “கரூர் மாவட்டம் தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டம்” என்று நிரூபித்த மாநிலக் கழக, மாவட்டக் கழக, மாநகரக் கழக, நகரக் கழக, ஒன்றியக் கழக, பேரூர் கழக, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் அத்தனை பேருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.
நம்மதான் ஜெயிக்கிறோம்.. நம்ம மட்டும்தான் ஜெயிக்கிறோம் என்று மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா பதிவிட்டுள்ளார்.