விருதுநகரில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான வழக்கு விசாரணையின் போது பேராசிரியை நிர்மலா தேவி நீதிபதியின் முன் மயங்கி விழுந்தார்.
ஜாமீனில் வெளிவந்துள்ள நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்காக ஆஜராகினர்.
கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றது, அவர்களுக்கு தவறான பாதைக்கு அழைத்து செல்ல கூட்டு சதி செய்தது உட்பட 8 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மூவரும் மறுத்தனர்.
மாணவிகளை தன்னுடைய குழந்தைகள் போல் பாவித்து வருவதாக நீதிபதியிடம், நிர்மலாதேவி கூறினார். விசாரணையின் போது நீதிபதி முன் நிர்மலாதேவி மயங்கி விழுந்தார்.
அவரை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.