நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் மு.க.ஸ்டாலின்

நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் மு.க.ஸ்டாலின்
நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் மு.க.ஸ்டாலின்
Published on

தமிழகத்தில் ஆட்சி அமைக்க நாளை ஆளுநரை சந்தித்து உரிமை கோருகிறார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.

இன்று மாலை எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தலைவராக ஸ்டாலின் தேர்வாகும் நிலையில், நாளை ஆளுநருடன் சந்திக்கவுள்ளார். நாளை மாலை 6.30 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், 7 ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு, பதவி ஏற்பு விழாவுக்கு ஒவ்வொரு அமைச்சருக்கும் 8 முதல் 10 பாஸ் மட்டுமே வழங்கப்பட்டு, மொத்தம் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com