மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் நாற்காலி மேல் பதவி வெறி பிடித்துவிட்டது - ஓ.எஸ்.மணியன்

மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் நாற்காலி மேல் பதவி வெறி பிடித்துவிட்டது - ஓ.எஸ்.மணியன்
மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் நாற்காலி மேல் பதவி வெறி பிடித்துவிட்டது - ஓ.எஸ்.மணியன்
Published on

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் நாற்காலி மேல் பதவி வெறிபிடித்து விட்டது என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.

நாகை மாவட்டம் செட்டிச்சேரி அருகே உள்ள கடுவையாற்றின் குறுக்கே 16 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள கதவணை பூமிபூஜை விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரிடம்,

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்த அதிமுக அமைச்சர்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறாரே என்று செய்தியாளர் கேட்டதற்கு, உலக அளவில் தலைகுனிவை ஏற்படுத்திய வீராணம் திட்டத்தில் மெகா ஊழல் செய்தது திமுக. வீராணம் திட்டத்தில் தகுதியற்ற ஒப்பந்ததாரருக்கு முன் பணம் வழங்கப்பட்டது எந்த அடிப்படையில் என கேள்வி எழுப்பிய கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அதற்கு 720 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி நிறைவேற்றி மக்களுக்கு கொண்டு வந்தது அதிமுக அரசு என்றார்.

இப்படிப்பட்ட மெகா ஊழலை செய்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் நாற்காலி மேல் பதவி வெறி பிடித்து பைத்தியம் பிடித்துவிட்டது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காட்டமாக பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com