சுபஸ்ரீ மரணக்குழியின் ஈரம் காயும் முன், அடுத்த கட் அவுட்டுக்காக முதலமைச்சர் ஓடியிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின் பிங் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பேனர் வைப்பதற்கு தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், “அங்கீகாரம் இல்லாமல் பேனர் வைத்து அப்பாவிப் பெண் சுபஶ்ரீ உயிரழப்புக்குக் காரணமான அதிமுக கட்சி, அந்த உயிருக்கு ஒரு அனுதாபச் செய்தி கூட தரவில்லை. அந்த மரணக்குழியின் ஈரம் காயும் முன், அடுத்த கட் அவுட்டுக்கு அனுமதி வாங்க உயர்நீதிமன்றத்திற்கு ஓடி இருக்கிறார் முதல்வர் எடப்பாடி!
இந்த வேகத்தையும் அக்கறையையும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் காட்டியிருந்தால் பாராட்டலாம் ! வெட்டி பந்தாக்களிலும், போலிக் கெளரவங்களிலும் காலம் கடத்த நினைப்பதைத் தவிர, முதலமைச்சரின் செயல்பாடுகளில் சொல்லிக் கொள்வது மாதிரி எந்தச் சாதனையும் இல்லை!” என்று விமர்சித்துள்ளார்.