கால்வாய்களை தூர்வாராததே மழை நீர் தேங்கக் காரணம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

கால்வாய்களை தூர்வாராததே மழை நீர் தேங்கக் காரணம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு
கால்வாய்களை தூர்வாராததே மழை நீர் தேங்கக் காரணம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு
Published on

எண்ணூரிலிருந்து முட்டுக்காடு வரையில் 49 கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ள கால்வாயை தூ‌ர்வாரியிருந்தால் சென்னை மாநகரில் தண்ணீர் தேங்கும் நிலை உருவாகியிருக்காது என எதிர்க்கட்சித் தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்தார்.‌

சென்னை கொளத்தூர் பகுதியில் திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான முக.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொளத்தூர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியதாகக் கூறினார். ஏற்கெனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருந்தால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்காது என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "ஆங்காங்கே மழை நீர் தேங்கி மக்களுக்கு பல பிரச்சனைகள் உருவாகியுள்ளது. கழிவு நீர் உந்து நிலையம் பல செயல்படாத நிலை கடந்த வர்தா புயலின் போது ஏற்பட்டது. அதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது.அதிகாரிகள் முறையாக பணிகளை மேற்கொண்டிருந்தால் மழை நீர் தேங்கக்கூடிய நிலை ஏற்பட்டிருக்காது. இப்போதாவது நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும்.எண்ணூர் முதல் முட்டுக்காடு வரை 49 கிமீ கால்வாயை தூர்வாரியிருந்தால் சென்னை மாநகரில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டிருக்காது. மைனாரிட்டியாக இருக்கக்கூடிய ஆட்சியை  தக்கவைத்துக் கொள்வதிலும், எம்எல்ஏக்கள் அணி மாறாமல் தடுக்க கமிஷன் கொடுப்பது என்பதிலேயே இந்த ஆட்சி நடைபெறுகிறது. 
கிரானைட் முறைகேடு பிரச்சனையில் சகாயம் கமிஷனை மூடி மறைக்க முயற்சி நடக்கிறது" என தெரிவித்தார். மேலும், மக்களின் பிரச்னைகளை சரிசெய்யும் பணியில் திமுக நிர்வாகிகள் ஈடுபட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்ததாகத் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com