தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுப்பது சாத்தியமில்லை என நெல்லை ஆணையர் சுகபுத்ரா விளக்கம் அளித்துள்ளார். மக்கள் மற்றும் ஆலைகள் பெருக்கமே ஆற்றின் மாசிற்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நெல்லை மாநகரப்பகுதியில் மாசு கலக்கப்படும் 16 இடங்களை கண்டறிந்துள்ளதாகவும், அவற்றில் 14ல் மறுசுழற்சி மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஆற்றில் மாசு கலக்காமல் தடுக்க தற்காலிக நடைமுறைகள் கையாளப்படுவதாகவும், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிறைவு பெற்ற பிறகே இந்த பிரச்னைக்கு 80 சதவிகித தீர்வு கிடைக்கும் என்றும் ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக பிரச்னையை சரி செய்ய சாத்தியம் இல்லை என்ற போதும், விரைவில் தாமிரபரணியின் புனிதம் காக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். தாமிரபரணி
ஆற்றை காக்க வேண்டும் என இன்றைய கூட்டத்தில் கவுன்சிலர் பவுல்ராஜ் மனு அளித்திருந்தார். நீதிமன்றமும் தனது அதிருப்தியை பதிவு செய்திருந்தது. இச்சூழலில் நெல்லை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.