”கேள்வி கேட்ட ஆசிரியரை பாராட்டுகிறேன்; நடந்த தவறுக்கு நிச்சயம் தண்டனை உண்டு”- அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்மஸ்ரீ மகா விஷ்ணு என்பவர் மோட்டிவேஷன் என்ற பெயரில் பிற்போக்குத்தனங்களை விதைக்கும் வகையில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அசோக் நகர்
அசோக் நகர்முகநூல்
Published on

சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்மஸ்ரீ மகா விஷ்ணு என்பவர் மோட்டிவேஷன் என்ற பெயரில் பிற்போக்குத்தனங்களை விதைக்கும் வகையில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இதற்கு, முதலமைச்சர் ஸ்டாலின், எம்பி ஜோதிமணி, கார்த்திக் சிதம்பரம், மாணவர் அமைப்பினர் என்று பலத்தரப்பினர் தங்களின் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இதற்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளியில் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், எடுக்கப்படும் நடவடிக்கை தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, அசோக் நகர் பள்ளியில் உறையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ்... "பள்ளிக்கூடத்தில் ஏன் என்று கேள்வி எழுப்ப வேண்டும். ஆசிரியர்களே கேள்வி எழுப்பவில்லை என்றால்.. ஆசிரியரே கேள்வி கேட்கவில்லை என்று மாணவர்கள் நினைக்கும் சூழலில், படிக்கும் பிள்ளைகளுக்குத்தான் பெரிய பிரச்னையாக அமையும்.. ஆகவேதான்..’பிற்போக்கு சிந்தனையை எதற்கு விதைக்கிறீர்கள் .இது எவ்வாறு சாத்தியப்படும்.’ என்று கேட்ட ஆசிரியராக சங்கர் சாரை நான் பார்க்கிறேன். இவர் தமிழ் வாத்தியார்.

இதுப்போன்ற பிற்போக்கு தனவாதிகளிடத்திலிருந்து அன்றிலிருந்தே நம்மை பாதுகாப்பது தமிழ் மொழிதான்.. தாய் மொழி எவ்வளவு அவசியமானது என்பதை உணர்த்ததான் இதை கூறுகிறேன்.

மாணவர்கள் நன்றாக கல்வி கற்க வேண்டும். அன்பில் மகேஸாகிய நான் பேசுகிறேன் என்பதற்காக ,..நான் சொல்வது அனைத்தும் சரி என்று எடுத்துவிடக்கூடாது... நான் சொல்வது சரிதானா? இல்லையா? என பகுத்தறிந்து நீங்கள் கருத்தை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். இதைதான் தந்தை பெரியாரும் தெரிவித்தார்.

மனிதர்களுக்குதான் பகுத்தறியும் அறிவாற்றல் உள்ளது. விலங்குகளுக்கு இல்லை. பள்ளிக்கூடத்தில் யாரேனும் சிறப்புரை ஆற்ற வந்தால்.. வருபவர் யார்? அவரிடம் என்ன கேள்வியை எழுப்பலாம்.. என்று தான் யோசிக்க வேண்டுமே தவிர.. அனைத்திற்கும் உணர்ச்சிவசப்படக் கூடாது.

பெண்களாக நீங்கள் சேமித்து குடும்பதை வழிநடத்துவதற்கு முன்னுதாரணமாக இருக்கிறீர்கள். ஆகவே, நீங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்லும் போது பகுத்தறிவாக சிந்தித்து செயல்பட வேண்டும். இங்கு அனைவரும் சமம்.. ஏற்றத்தாழ்வு எதுவும் கிடையாது... கல்வி ஒன்று மட்டுமே ஒருவரிடமிருந்து திருட முடியாத சொத்து...

புயலில், வெள்ளத்தில், தீயில் கல்விச்சான்றிதழ்கள் அடித்து சென்றாலும், நீங்கள் கற்றக்கல்வி ஒருநாளும் உங்களை விட்டு செல்லாது. அதை திருடவும் முடியாது.

அசோக் நகர்
“தேவை அறிவியல் சிந்தனையே!”| அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய ஆன்மீக பேச்சு.. முதல்வர் ஸ்டாலின் பதிவு

ஆசிரியர் பெருமக்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை ..இதை நீங்கள் கோரிக்கையாகவும் வைத்துக்கொள்ளலாம்... எச்சரிக்கையாகவும் வைத்துக்கொள்ளலாம்.

பள்ளியின் வளாகத்தில் குழந்தைகள் நுழைந்துவிட்டால்.. இங்கே எப்படிப்பட்ட அறிவு சார்ந்தவர்களை அழைத்து செல்ல வேண்டும் என்ற அறிவினை ஆசிரியர்களாகிய நீங்கள் பயன்படுத்திக்கொண்டு நாம் அவர்களை அழைக்க வேண்டும்.. நிர்வாகம் என்று வரும்பொழுது யாரை அழைக்க வேண்டும், எப்படி அனுமதிப்பெறவேண்டும் என்ற குறைந்தபட்ச புரிதல் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும்.

நம்மை சுயமாக சிந்திக்க வைப்பது நமது கல்விதான் என்று விளையாட்டுத்துறை அமைச்சரே நேற்றைய தினம் தெரிவித்திருந்தார். முதலமைச்சரும், ‘அறிவியர் அறிவே சிறந்த அறிவு, முன்னேற்றத்திற்கான அறிவு’ என்று தெரிவித்திருக்கிறார் என்றால் இதுவே திராவிட மாடல் அரசின் முக்கியமான இலக்கான இருக்கிறது. தவறுகள் யார் செய்தாலும், தண்டனை கண்டிப்பாக உண்டு.

எப்படிப்பட்ட தண்டனை என்பதை உறுதி செய்வது அமைச்சராகிய என்னுடைய கடமை. அதிகப்படியான மதிப்பெண் பெற்றால் மட்டும் புத்திசாலிக்கிடையாது.. யார் என்ன கருத்து கூறுகிறார்கள் என்பதை உணர்ந்து, மாணவச்செல்வங்களாகிய நீங்கள் பகுத்தறிந்து பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்..” என்று தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com