உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குள் நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உலகெங்கும் இறந்தவர்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனிடையே இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் அதிகமாகக் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக மருந்தகங்கள், உணவகங்கள் தவிர்த்துப் பிற அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்குக் கால நிர்ணயம் வழங்கப்பட்டுள்ளது.