சென்னை நகர்புறத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை - அமைச்சர் எ.வ.வேலு

சென்னை நகர்புறத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை - அமைச்சர் எ.வ.வேலு
சென்னை நகர்புறத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை - அமைச்சர் எ.வ.வேலு
Published on
5 சுங்கச்சாவடிகளை அகற்றவது குறித்து கூட்டத்தொடர் முடிந்த பின்பு ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய திருவையாறு சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் துரை சந்திரசேகரன், தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு வருவதென்றால் பல்வேறு சுங்கச்சாவடிகளை கடக்க வேண்டிய நிலை உள்ளதாகவும், சட்டமன்ற உறுப்பினரான எங்களிடம் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டுமென மக்கள் வலியுறுத்துவதாக கூறினார். மேலும் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதிலளித்து பேசிய நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “தமிழகத்தில் மொத்தம் 48 சுங்கச் சாவடிகள் உள்ளது. இவை பெரும்பாலும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவற்றில் நகர்ப்புற பகுதிகளில் 14 சுங்கச் சாவடிகளும், புறநகர் பகுதிகளில் 9 சுங்கச் சாவடிகளும் உள்ளது. சென்னை நகர்புற பகுதிக்குள் உள்ள சென்ன சமுத்திரம், நெமிலி, வானகரம், பரனூர் மற்றும் சூரப்பட்டு ஆகிய 5 சுங்கச் சாவடிகளை கடக்க நீண்ட நேரம் ஆகிறது. அதை அகற்ற முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கும் முதலமைச்சர் ஏத்கனவே கடிதம் எழுதியுள்ளார். கூட்டத்தொடர் முடிந்தவுடன் ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து இதுகுறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க உள்ளோம்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com