சென்னை கலைவாணர் அரங்கத்தில் நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்த பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அதில் அவர்,
”இந்த நீட் ஒழிப்பிற்கான கையெழுத்து இயக்கத்தை திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கி இருந்தாலும், இதை மாபெரும் மக்கள் இயக்கமாகதான் முன்னெடுத்து செல்லவேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் இடுகின்ற இந்த ஒவ்வொரு கையெழுத்தும் தமிழ்நாட்டு கல்வி உரிமைப்போராட்டத்தின் உயிரெழுத்தாக என்றென்றும் நிலைத்திருக்கும். பிஜி நீட் சேர, 0 பெர்சண்டைல் எடுத்தால் போதுமாம். இதுதான் நீட்டின் நிலை (எனக்கூறி, முட்டையொன்றை கையில் காண்பித்தார்)
ஒருமுறை சாவியைப் பார்த்து சுத்தியல் ‘உன்னைவிட நான் பெரியதாக, வலிமையாக இருக்கிறேன். ஆனாலும் பூட்டை திறக்க நான் கஷ்டப்படுகிறேன். நீ மட்டும் எப்படி பூட்டை ஈஸியாக திறந்து விடுகிறாய்?’ என்று கேட்டதாம்.
அதற்கு சாவி, ‘நீ என்னைவிட பலசாலி தான், உருவத்தில் என்னைவிட பெரியவன்தான், ஆனா நீ அந்த பூட்டை திறக்க அதன் தலையில் அடிக்கிறாய், நான் அதன் இதயத்தை சென்று தொடுகிறேன். அதனால் தான் என்னால் எளிதாக திறக்க முடிகிறது’ என்று பதில் சொன்னதாம். எனவே பாஜக என்ற சுத்தியல் எவ்வளவு ஓங்கி அடித்தாலும் அதனால் தமிழர்களின் இதயத்தை திறக்க முடியாது” என்றார்.