திமுக தலைமை தீர்மான குழு சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இளைஞரணி சார்பில்அமைக்கப்பட்டிருக்க கூடிய நூலகங்களுக்கு நூல் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி, “எதிர்க்கட்சியாக இருக்கும் போதும், ஆளும் கட்சியாக இருக்கும் போதும் நீட் தேர்வை எதிர்த்து கொண்டுதான் இருக்கிறோம். நீட் தேர்வு திமுக-வின் பிரச்னை இல்லை. ஒட்டுமொத்த மாணவர்களின் பிரச்னை.
நான் பேசாததை எல்லாம் பேசியதாகக் கூறி மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். ஆனால், நான் கருணாநிதியின் பேரன். ஸ்டாலினின் மகன். யாரிடமும் மன்னிப்பு கோரமாட்டேன்” என்று பேசினார். அவர் பேசியதன் முழு விவரத்தை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவிலும் காணலாம்: