உதய் திட்டத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கோரிய மாற்றங்கள் செய்யப்பட்டதாலேயே அந்தத் திட்டத்தில் தமிழக அரசு இணைந்துள்ளதாக அமைச்சர் தங்கமணி சட்டப் பேரவையில் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய திமுக உறுப்பினர் அன்பழகன், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த உதய், ஜிஎஸ்டி மற்றும் பொது நுழைவுத் தேர்வு போன்ற திட்டங்களை தமிழக அரசு தற்போது ஆதரிக்க என்ன காரணம்? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி உதய் திட்டத்தை ஜெயலலிதா எதிர்க்கவில்லை என்றும் அதில் சில மாற்றங்களைதான் வலியுறுத்தினார் எனவும் தெரிவித்தார். 3 மாதத்திற்கு ஒரு முறை மின்கட்டணம் உயர்த்தப்படவேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதாலேயே உதய் திட்டத்தில் தமிழகம் இணைந்ததாக அவர் விளக்கமளித்தார். ஜிஎஸ்டி குறித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கமளித்தார்.