'கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில் தமிழ்நாடு முதல் மாநிலம்' - மா. சுப்பிரமணியன்

'கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில் தமிழ்நாடு முதல் மாநிலம்' - மா. சுப்பிரமணியன்
'கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில் தமிழ்நாடு முதல் மாநிலம்' - மா. சுப்பிரமணியன்
Published on
தமிழகத்தில் இன்று 50,000 தடுப்பூசி மையங்களில் 80.56 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
தமிழ்நாடு முழுவதும் இன்று 16-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், ''தமிழகத்தில் 50,000 தடுப்பூசி மையங்களில் 80.56 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் 89% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அபாய நாடுகள் மட்டுமின்றி அபாயமில்லாத நாடுகளிலிருந்து வருவோருக்கும் 7 நாட்கள் தனிமைப்படுத்துவது கட்டாயம். 8வது நாளில் கொரோனா இல்லை என்ற பரிசோதனை முடிவு வந்தால் மட்டுமே வெளியே வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அபாயமில்லாத நாடுகளிலிருந்து வருவோருக்கான பரிசோதனை விகிதம் 2 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜனவரி 3ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதினருக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 50.68 லட்சம் டோஸ் கோவிஷீல்டு, 29.88 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தமிழகம் முழுவதும் நடைபெறும் தடுப்பூசி முகாமில் தகுதி உடையோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். ஒமைக்ரான் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால் முதியோர் அவசியம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது'' என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com