உச்ச நீதிமன்ற நிபந்தனை: ED அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சரான பிறகு முதன்முறையாக ஆஜராகி கையெழுத்திட்டார்.
செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்றம்
செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்றம்file image
Published on

அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

471 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி கடந்த 26ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்தார்.

ed
edtwitter

உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜிக்கு வழங்கிய நிபந்தனை ஜாமீனில் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று கையெழுத்திட வேண்டும், வழக்கின் சாட்சியங்களை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது, பாஸ்போர்ட் ஒப்படைக்க வேண்டும், மாதத்தின் முதல் சனிக்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தது.

செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்றம்
நாகை: நடுக்கடலில் மீனவர்கள் இடையே மோதல் - வலைகளை அறுக்கப்பட்டதாக ஒருதரப்பினர் புகார்

இந்நிலையில், ஜாமீனில் வெளிவந்த பிறகு கடந்த 27 ம் தேதி வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி முதன்முறையாக கையெழுத்திட்டார். அதன்பிறகு செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு நேற்று வழங்கப்பட்டது.

இதையடுத்து அமைச்சரான பிறகு முதன்முறையாக கையெழுத்திட இன்று காலை 10:44 மணியளவில் அமைச்சர் செந்தில்பாலாஜி நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். தனது சொந்த வாகனத்தில் எவ்வித கட்சி ஆட்கள் பாதுகாப்பும் இன்றி தனியாக வந்து கையெழுத்திட்டுச் சென்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com