“IT Raid, ED Raid... எந்த சோதனைக்கும் நாங்கள் தயார்” - அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் சோதனைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி நடைபயணத்துக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி அவர் கூறுகையில்,
“வருமான வரித்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டது. இப்போ அடுத்து அமலாக்கத்துறை வந்திருக்கு. இது எனது நண்பர்கள் சொல்லிதான் எனக்கே தெரியும். வாக்கிங் போனதை நிறுத்திவிட்டு டாக்ஸி பிடிச்சு வந்திருக்கேன். என்ன நோக்கத்துல வந்திருக்காங்க, என்ன தேடுறாங்க, எதை தேடுவதற்காக வந்திருக்காங்க என்று பார்ப்போம்.
இதற்கு முன் நடந்த வருமான வரித்துறை சோதனைல பறிமுதல் செய்தது தொடர்பாக என்னென்ன எடுத்திருக்கோம் என்று கையெழுத்து போட்டு கொடுத்திருக்காங்க. அங்கல்லாம் என்ன இருக்கோ அதைதானே எடுத்திருக்க முடியும். இப்ப நான் வீட்டுக்குள்ள போறேன். ஆபீசர்ஸ் வெயிட் பண்றாங்க. போகலனா தவறாகிவிடும். அவங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கணும்.
IT-யா இருந்தாலும் ED-யா இருந்தாலும் எந்த சோதனைக்கு யார் வந்தாலும் முழு ஒத்துழைப்பு கொடுக்க நாங்கள் தயார். எந்த ஆவணங்களை கைப்பற்றி விளக்கம் கேட்டாலும் விளக்கம் சொல்ல தயார். சோதனை முடிவதற்குள் ஒரு கருத்தை நாம் சொல்லிவிட முடியாது. முடியட்டும். முடிந்த பிறகு நான் பேசுறேன்” என்றார்.