“குளத்தில் கூட தாமரை மலரக் கூடாது” - அதிகாரிகளிடம் அமைச்சர் சேகர் பாபு பேச்சு

சென்னை அடுத்த போரூரில் பசுமை பூங்காவை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, குளத்தில் கூட தாமரை மலரக் கூடாது என அதிகாரிகளிடம் கிண்டலடித்தார்.
அமைச்சர் சேகர் பாபு
அமைச்சர் சேகர் பாபுpt desk
Published on

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பில் ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் 103 இருக்கைகள், நடைபாதை, செங்கல் நடைபாதை, கருங்கல் நடைபாதை, கூடைப்பந்து விளையாட்டு மைதானம், சிறுவர் விளையாட்டுத் திடல், 6.85 ஏக்கர் அளவில் ஏரி, திறந்தவெளி உடற்பயிற்சி மைதானம், பார்க்கிங், கழிப்பிடம், கடைகள், மின்விளக்கு, சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

குளம்
குளம்pt desk

இந்நிலையில் பூங்காவில் நடைபெற்று வரும் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் இதுவரை செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்தும், எப்போது பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

அமைச்சர் சேகர் பாபு
”பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்டோரை குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதா?”-கஸ்தூரிக்கு ஆ.ராசா கடும் கண்டனம்

மேலும், கூடுதலாக மின்விளக்கு வசதி மற்றும் பாதுகாப்பு வசதி குறித்து சில பரிந்துரைகளையும் அமைச்சர் தெரிவித்தார். அத்துடன் அங்கு குளத்தில் மலர்ந்திருந்த பூக்களை பார்த்து, குளத்தில் கூட தாமரை மலரக் கூடாது என கிண்டலாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com