தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் 5 ஆண்டுகளுக்கும் மேல் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றுவோர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அன்னதானத் திட்டப் பணிகளையும் ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிமுக ஆட்சியில் 3,700 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் சொத்துகள் மீட்கப்பட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதுகுறித்த பட்டியலை வெளியிட முடியுமா என கேள்வி எழுப்பினார்.
கோயில் பணியாளர் நியமனம் தொடர்பான சர்ச்சை குறித்தும் அமைச்சர் விளக்கமளித்தார். அப்போது தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் 5 ஆண்டுகளுக்கும் மேல் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றுவோர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கூறினார்.