“பூரண மதுவிலக்கு என்பது லட்சியம்; படிப்படியாக கடைகளை குறைப்பது நிச்சயம்”- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

“மற்ற அரசியல் கட்சிக்கு மாற்றாக எங்கள் கட்சி இருக்கும் என்று நடிகர் விஜய் கூறுகிறார். இது எல்லா புதிய கட்சிகளும் சொல்வதுதான். 2026 எங்களது இலக்கு. 234 என்பது லட்சியம் 200 நிச்சயம்” என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதிpt desk
Published on

செய்தியாளர்: சுப. முத்துப்பழம்பதி

புதுக்கோட்டை அடுத்த அகரப்பட்டி மற்றும் பெருமாள்பட்டி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டடங்களை இன்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ரகுபதி
ரகுபதி

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி பேசுகையில்...

“கடந்த 2016ல் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று நாங்கள் சொன்னோம். அதனால் திருப்பூர் உள்ளிட்ட பகுதியிலுள்ள தொழிலாளர்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில் நாங்கள் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று கூறவில்லை. படிப்படியாகதான் மதுவிலக்கை அமல்படுத்துவோம் எனக் கூறியிருந்தோம். ஆட்சிக்கு வந்தபின் சொன்னபடி 500 கடைகளை நாங்கள் குறைத்துள்ளோம். இருப்பினும் பூரண மதுவிலக்கு என்பதே எங்களது லட்சியம். படிப்படியாக மது கடைகளை குறைப்பது நிச்சயம்.

அமைச்சர் ரகுபதி
10 லட்சம்பேர் கண்டுகளிப்பு... லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுகிறது சென்னை விமான சாகச நிகழ்ச்சி!

எங்களிடம் வந்து யாரும் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லோரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தோழமையோடுதான் பழகுகின்றனர்.

மற்ற அரசியல் கட்சிக்கு மாற்றாக எங்கள் கட்சி இருக்கும் என்று விஜய் சொல்கிறார். புதிதாக அரசியல் கட்சி ஆரம்பிக்கின்றவர்கள் சொல்லக்கூடிய கருத்துக்களைதான் விஜய்யும் கூறுகிறார். எங்களைப் பொருத்தவரை எங்கள் பாதை எங்களது பயணம் எங்களது இலக்கில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். 2026 எங்களது இலக்கு. 234 என்பது லட்சியம், 200 நிச்சயம்.

vijay
vijay pt

சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று நாங்கள்தான் கேட்டுள்ளோம். தேர்தல் வாக்குறுதியிலும் கொடுத்துள்ளோம். அதை தேசிய வாரியாக எடுத்தால்தான் சரியாக இருக்கும் என்பதைதான் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

அமைச்சர் ரகுபதி
“விளையாட்டுத் துறையில் சாதிக்க விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் முக்கியம்”- கிரிக்கெட் வீரர் நடராஜன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com