இணையதள வழியில் ஓட்டுநர் உரிம சேவைகள் - அமைச்சர் ராஜகண்ணப்பன்

இணையதள வழியில் ஓட்டுநர் உரிம சேவைகள் - அமைச்சர் ராஜகண்ணப்பன்
இணையதள வழியில் ஓட்டுநர் உரிம சேவைகள் - அமைச்சர் ராஜகண்ணப்பன்
Published on

பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வராமலே ஆதார் அடிப்படையில் இணைய வழியில் ஓட்டுநர் உரிம சேவைகளை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்று சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் இதுகுறித்து பேசினார். அப்போது பொதுமக்கள் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு வராமலேயே ஆதார் அட்டையின் அடிப்படையில் பழகுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை பெறலாம் என அறிவித்தார். மேலும் ஓட்டுநர் உரிமத்தை புதுபித்தல், முகவரி மாற்றம் போன்ற சேவைகளையும் பெறலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் போக்குவரத்து துறையிலுள்ள ஓட்டுநர், நடத்துநர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அறிவித்தார். அரசு போக்குவரத்து கழகங்களில் கூடுதல் வருவாய்க்காக பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனை நிலையங்கள் அதாவது போக்குவரத்து துறை சார்பாக 10 இடங்களில் பெட்ரோல், டீசல் பங்குகள் தொடங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையுயர்வை கருத்தில்கொண்டு 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், புதிய தொழில்நுட்பத்தில் 2,213 டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com