திருச்சி மத்திய சிறைச் சாலையில் அமைச்சர்கள் ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, 10 ஆண்டுளாக சிறையில் உள்ள 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதாகவும், சில நிபந்தனைகளுக்குட்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். கைதிகளின் பெயர் பட்டியலில் 20 நாட்களில் தயாரிக்கப்படும் என்றும், தேசத்துரோகம், குண்டு வெடிப்பு போன்ற கொடுங்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இதில் அடங்கமாட்டார்கள் எனவும் அமைச்சர் ரகுபதி கூறினார்.