தமிழகத்தில் 100 சதவிகிதம் போலியோ நோய் அகற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தலைஞாயிறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ஆட்சியர் சுரேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் பேசிய அமைச்சர், நாகை மாவட்டத்தில் மொத்தமாக ஆயிரத்து 27 மையங்களில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 585 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாகக் கூறினார். இப்பணியில், பொதுசுகாதாரம், உள்ளாட்சி, சமூக நலம், ஊட்டச்சத்து பணியாளர்கள், செவிலியர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் என 3 ஆயிரத்து 955 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.