தமிழக அரசின் சிறப்பு பொங்கல் தொகுப்பிற்காக 130 கோடிக்கு ஆவின் நெய் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கிருஷ்ணகிரியில் பேட்டியளித்துள்ளார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமான ஆவின் நிறுவனத்திலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பால், பால் பவுடர், ஜஸ் கீரீம், நெய், உற்பத்தி ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து ஆவின் ஜங்ஷன் விற்பனை நிலையத்திற்கு சென்று பார்வையிட்டார் அமைச்சர். இதைத் தொடர்ந்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், “கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் ஆவின் நிறுவனம் மிகவும் மோசமான நிலையில் நீரில் மூழ்கி இருந்தது. ஆட்சி பொறுப்புக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின்தான், மூழ்கிய ஆவின் நிறுவனத்தை மீட்க நடவடிக்கை எடுக்க ஆணையிட்டார். அதன்படி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆவின் நிறுவனங்கள் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். அந்த வகையில் இன்று கிருஷ்ணகிரியில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற நிலையில் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் பாக்கி நிலுவை தொகையாக தீபாவளி பண்டிகையின்போது 330 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.