வெள்ள பாதிப்புகளை தடுப்பதில் மாநில அரசுடன் வானிலை மையங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இந்திய வானிலை மையத்தின் எச்சரிக்கைகள் சற்றே தாமதமாக வருவதாகவும் இதனால் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய வானிலை மையம் தனது கணிப்புகளை மேலும் துல்லியமாகவும் முன்கூட்டியே தருவதும் அவசியம் என்றும் அப்போதுதான் பாதிப்புகளை ஓரளவு தடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேற்கத்திய முறையிலான வானிலை கணிப்புகள் துல்லியமானதாகவும் நிகழ்வுக்கு கணிசமான நாட்கள் முன்னறிவிப்பதாக இருப்பதை அறிய முடிவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா போன்ற புவியியல் அமைப்பு கொண்ட நாடுகளில் துல்லியமான கணிப்புகளை மேற்கொள்வதில் சிரமங்கள் இருக்கும் என்றாலும் குறைபாடுகளை களைவது அவசியம் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.