உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், ஜூன் மாதத்திற்கு பிறகு மெல்ல மெல்ல அதன் தாக்கம் குறைய தொடங்கியது. இந்த காலகட்டத்தில் அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என பல தரப்பினருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தமிழகத்திலும் பல அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அரசியல் பிரமுகர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, திருவாரூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார்.
ஏற்கெனவே அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், துரைக்கண்ணு, செல்லூர் ராஜூ, நிலோஃபர் கபில், தங்கமணி என பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.