பள்ளிக்கல்வித்துறையில் பல சிறப்பான மாற்றங்களை கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக அந்தத் துறையின் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். மேலும், சிறந்த ஆசிரியர்களுக்கு ''கனவு ஆசிரியர்'' விருதும், அவர்கள் வங்கிக்கணக்கில் தலா 10 ஆயிரம் ரூபாய் வைப்புத்தொகையும் செலுத்தப்படும் என்று அவர் கூறினார்.
ஆண்டுதோறும் அரசுப்பள்ளியில் பயிலும் 100 மாணவர்களை மேல்நாடுகளுக்கு அனுப்பி, அங்குள்ள கலாசாரம் மற்றும் கலைகள் குறித்து தெரிந்துகொள்ள, அரசு 3 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கியிருப்பதாக செங்கோட்டையன் கூறினார். ஆய்வின் போது கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.