போரூர் ஏரியிலிருந்து அதிநவீன முறையில் தண்ணீரை சுத்திகரித்து விநியோகிக்கும் திட்டத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
சென்னை போரூரில், ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்துவைத்துப் பேசிய அமைச்சர்
எஸ்.பி.வேலுமணி, தினமும் 40 லட்சம் லிட்டர் குடிநீர் இந்த இயந்திரங்களின் மூலமாக சுத்திகரித்து விநியோகிக்கப்படும் என்றார்.
அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட உபகரணங்கள் மூலம் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு போரூர், வளசரவாக்கம் பகுதிகளுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் வறண்டு கிடக்கும் சூழலில், கைவிடப்பட்ட நிலையில் இருந்த போரூர் ஏரியிலிருந்து தற்போது தண்ணீர் விநியோகிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.