அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன் வழங்கியதில் ரூ.516 கோடி அளவில் முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
சிட்டா அடங்கலில் குறிப்பிடப்பட்ட சாகுபடி நிலங்களின் பரப்பளவை அதிகரித்துக்காட்டி பலமடங்கு கூடுதல் கடன் பெற்றுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்திருக்கிறார். சேலம், நாமக்கலில் மட்டும் ரூ.503 கோடி முறைகேடு நடந்திருப்பதும் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கெனவே தமிழ்நாடு தொழிலக கூட்டுறவு வங்கியில் சிறு குறு நிறுவனங்கள் பெயரில் போலி நகைகள் வைத்து ரூ.7 கோடி மோசடி நடந்துள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்திருந்த நிலையில் தற்போது பயிர்க்கடனில் மோசடி நடந்திருப்பதாக ஐ.பெரியசாமி தெரிவித்திருக்கிறார்.