"நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து" - மிசா கால சிறை வாழ்க்கையை சொல்லி கண்கலங்கிய அமைச்சர் துரைமுருகன்!

"செல்வாக்கு மிக்க எங்கள் வேட்பாளரைக் கைது செய்ய நினைக்கிறார்கள் அதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்" என அமைச்சர் துரைமுருகன் காட்டமாகப் பேசியுள்ளார்.
அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்pt web
Published on

கண்கலங்கிய அமைச்சர் துரைமுருகன்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளராகக் கதிர் ஆனந்த் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து மேடையில் பேசிய அவர், "பிரதமர் மோடி வாரிசு அரசியல் பற்றிப் பேசுகிறார். ஆனால் நாங்கள் தியாகம் செய்ததை போல் அவர்கள் செய்துள்ளார்களா? நாங்கள் தியாகத்திலேயே வளர்ந்தவர்கள். மிசாவில் நான் கைதான போது எனது காலரை எனது மகன் கதிர் ஆனந்த் பிடித்துக் கொண்டான். அந்தப் பிஞ்சு கையை காவல்துறையினர் தூக்கி எறிந்து என்னை கைது செய்து செய்தார்கள். அதற்குப் பிறகு மூன்று மாத காலம் அவர்களைப் பார்க்க முடியவில்லை.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

மூன்று மாதம் கழித்து எனது மனைவி எனது ஒரு வயது மகன் கதிர் ஆனந்த் சிறைக்கு அழைத்து வந்தார். அவனைப் பார்த்தபோது கட்டித் தழுவிக் கொள்ளலாம் என ஏங்கினேன். அப்போது அங்கு இருந்த காவலர் ஒருவர், " நீ குற்றவாளி குழந்தையைத் தொடக்கூடாது நீ அவனை ஏதாவது (கொலை) செய்து விடுவாய்" எனக் கூறி தடுத்துவிட்டார். நானா எனது மகனை ஏதாவது செய்து விடுவேன் என அப்போதே கண்கலங்கினேன்.

அமைச்சர் துரைமுருகன்
'நாங்க விலகியிருக்க ரெடி' - தேர்தல் தோல்வி குறித்து சோனியா காந்தி

எனது மகன் கையை நீட்டி அப்பா அப்பா எனக் கூறினான். அதற்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வந்து ஒரு வருட காலம் எனது மகனை நான் தொட்டதே இல்லை. அந்த அளவுக்கு வலியை அனுபவித்தவர்கள் நாங்கள் எனக் கண் கலங்கி நா தழுதழுத்த குரலில் பேசினார். எங்களைப் பார்த்த வாரிசு அரசியல் என மோடி பேசுகிறார்.

மிகப்பெரிய ஆபத்தை நோக்கி இந்தியா போய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் ஜனநாயக குரல் வலையை நெரிக்கும் காரியத்தை மத்திய அரசு செய்கிறார்கள். இந்த நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது போல் ஒரே கட்சியைக் கொண்டுவர முயல்கிறார்கள். வடகொரியாவில் நடப்பது போல் ஒரு ஆட்சியை இங்கு நடத்த வேண்டும் எனப் பாரதிய ஜனதாவினர் கருதுகிறார்கள்.

"மீண்டும் ஒரு மிசா வரும்" - அமைச்சர் துரைமுருகன்

நீங்கள் போடுகின்ற ஓட்டு ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகப் போடுகின்ற ஓட்டு. இல்லாவிட்டால் மீண்டும் ஒரு மிசா வரும்.

தேர்தல் சமயத்தில் IT சோதனை மட்டுமல்ல இன்னும் பல சோதனைகள் வரும். குறிப்பாகச் சொல்லப்போனால் எங்கள் செல்வாக்கு மி க்க வேட்பாளர் கைது பண்ணுங்க, Fir போடுங்க என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என மேல் இடத்தில் இருந்து எனக்குத் தகவல் வந்துள்ளது. அதைப் பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. தமிழகத்தில் நாங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com