மேகதாது அணைக்கு சாத்தியமில்லை என மத்திய அமைச்சர் கூறினார் - அமைச்சர் துரைமுருகன் பேட்டி

மேகதாது அணைக்கு சாத்தியமில்லை என மத்திய அமைச்சர் கூறினார் - அமைச்சர் துரைமுருகன் பேட்டி
மேகதாது அணைக்கு சாத்தியமில்லை என மத்திய அமைச்சர் கூறினார் - அமைச்சர் துரைமுருகன் பேட்டி
Published on

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சிக்குழு இன்று டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்தது. அதில் மேகதாது அணை மற்றும் தண்ணீர் பிரச்னை குறித்த பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.

டெல்லியில் ஜல்சக்திதுறை அமைச்சரை தமிழக அனைத்து கட்சிக் குழு சந்தித்த பின் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், ’’மேகதாது அணைக்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கை முழுமையாக இல்லை. மத்திய அரசின் நிபந்தனைகளை கர்நாடகா பூர்த்தி செய்யவில்லை; மேகதாது அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கூறினார். எனவே மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தி இருக்கிறோம். மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எந்த வகையிலும் மத்திய அரசு துணை போகக்கூடாது’’ என்று கூறினார்.

மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கப்படாது என தமிழக அனைத்துக்கட்சி குழுவினரிடம் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் உறுதியளித்துள்ளதாகக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com