“தேர்வு எழுதினால் போதும் வேலைக்கு லஞ்சம் தர வேண்டாம்” - திண்டுக்கல் சீனிவாசன்

“தேர்வு எழுதினால் போதும் வேலைக்கு லஞ்சம் தர வேண்டாம்” - திண்டுக்கல் சீனிவாசன்
“தேர்வு எழுதினால் போதும் வேலைக்கு லஞ்சம் தர வேண்டாம்” - திண்டுக்கல் சீனிவாசன்
Published on

வனத்துறையில் வேலைக்கு சேர வேண்டுமென்றால், போலீஸ் வேலையை போல தேர்வு எழுத வேண்டும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.

திண்டுக்கல் அடுத்துள்ள செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நந்தனார்புரம் கிராமத்தில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு திட்டம் இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். 

அதன்பின் பேசிய அவர், “இளைஞர்கள் நிறைய பேர் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறார்கள் மந்திரியிடம் சொன்னால் வேலை கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அமைச்சர் ஆகிய நான் சொல்வது என்னவென்றால், உடனே படித்த பிள்ளைகளுக்கு வேலை வேண்டுமென்றால் தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு தயாராக இருக்க வேண்டும். 

அதில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று விட்டால் யார் தயவும் தேவையில்லை. ஒரு பைசா லஞ்சம் கொடுக்காமல் நீங்கள் எழுதிய எழுத்தின் மூலமாகவும், கற்ற கல்வியின் மூலமாகவும் உங்கள் வீடு தேடி வேலை வரும். வேற யாரையும் நம்ப வேண்டாம். வனத்துறையை பொறுத்தவரை போலீஸ் போல் தேர்வில் தேர்ச்சி பெற்றபின், உடல்தகுதி அவசியம். அப்படி தகுதி உள்ளவர்கள்தான் வனத்துறையில் போக முடியும். நம்ம வனத்துறை தானே உங்களுக்குத்தானே ஓட்டுப் போட்டோம் வனத் துறையில் வேலை வாங்கி கொடுங்கள் என 100 பேர் வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். எது நடக்காதோ அதை கோரிக்கையாக கொடுப்பார்கள். அந்த மாதிரி கோரிக்கைகள் இங்கு வேண்டாம். பரீட்சை எழுதினால் வேலை கிடைக்கும்.

தவறாக போன காலங்களில் 30 வயது 40 வயதிற்கு எல்லாம் முதியோர் உதவித் தொகை கொடுத்துவிட்டார்கள். ஆதரவற்றவர்கள் ஓய்வு ஊதியம் கொடுக்க தகுதியானவர்கள் என்றால் முதியோர் உதவித்தொகை கொடுக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு பொறுத்தவரை பத்து பேரில் ஒருவர் தான் தகுதியான ஆளாக வருகிறார்கள். எங்களால் முடிந்தவரை பத்து பேரில் ஒரு ஆளாக உங்களைக் கொண்டு போவதற்கான சூழ்நிலையை கொண்டுவருவோம்” என்று கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com