கடலூர் மாவட்டத்தில் கழுதூரில் உள்ள தனியார் கல்லூரியில் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கைம்பெண்களுக்கு என்எல்சி நிர்வாகம் சார்பில் விலையில்லா தையல் எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 2 ஆயிரம் கைம்பெண்களுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் என்எல்சி நிறுவனத்தின் தலைவர் பிரசன்ன குமார் ஆகியோர் விலையில்லா தையல் எந்திரங்களை வழங்கினர்.
பின்னர் விழாவில் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தனது மனைவியும் தையல் தொழிலில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்ததாக கூறினார்.
மறைந்த தன் மனைவியின் நினைவலைகளை கூறும்போது அமைச்சர் சி.வி.கணேசன், மேடையில் தேம்பித் தேம்பி அழுதார். இது அங்கிருப்போரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.