டெல்லி புறப்பட்டுச் சென்றார் அமித் ஷா!

டெல்லி புறப்பட்டுச் சென்றார் அமித் ஷா!
டெல்லி புறப்பட்டுச் சென்றார் அமித் ஷா!
Published on

இரண்டு நாள் தமிழக பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டுச் சென்றார் அமித் ஷா

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்கான அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தார். கலைவாணர் அரங்கிற்குச் சென்ற அவரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர். அரங்கில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களுக்கு அமித் ஷா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நேற்று இரவு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இரவு 11 மணிக்கு மேல் குருமூர்த்தியுடன் ஆலோசனை நடத்தினார். 3 மணி நேரம் அந்த ஆலோசனை தொடர்ந்தது. இன்று காலை ஆர் எஸ் எஸ் நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்திய அமித் ஷா, பின்னர் கார் மூலம் சென்னை விமான நிலையம் சென்றடைந்தார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் அமித் ஷா. தேர்தல் எதிர்வரும் நிலையில் அமித் ஷாவின் தமிழக பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com