மலையிலிருந்து விழுந்து மினி லாரி விபத்து : 7 பேர் பலி

மலையிலிருந்து விழுந்து மினி லாரி விபத்து : 7 பேர் பலி
மலையிலிருந்து விழுந்து மினி லாரி விபத்து : 7 பேர் பலி
Published on

வாணியம்பாடி அருகே உள்ள கங்குந்தி மலையில் இருந்து மினி லாரி விழுந்த விபத்தில் 7 பேர் பலி என தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் குப்பத்திலிருந்து மினி லாரி ஒன்றில் மாங்காய் ஏற்றிக்கொண்டு 13 பேர் வேலூர் வந்துள்ளனர். தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான, வாணியம்பாடி அருகே உள்ள கங்குந்தி மலைப்பகுதியில் லாரி வந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி மலையில் இருந்து உருண்டு விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த பயங்கர விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மீதமுள்ளவர்களை  மீட்கும் பணியில், காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் ஆம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மினி லாரி கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் வேலூரி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com