40 அடி கிணற்றில் விழுந்த மாடு : போராடி சாதித்த தீயணைப்புதுறையினர்

40 அடி கிணற்றில் விழுந்த மாடு : போராடி சாதித்த தீயணைப்புதுறையினர்
40 அடி கிணற்றில் விழுந்த மாடு : போராடி சாதித்த தீயணைப்புதுறையினர்
Published on

திருப்பூரில் 40 அடி கிணற்றில் விழுந்த மாட்டினை 2 மணிநேரம் போராடிய பின், தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி (63). விவசாயம் செய்து வரும் இவர், தனது தோட்டத்தில் கறவை மாடுகள் மற்றும் ஆடுகளை வளர்த்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல் கால்நடைகளை தனது விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக விட்டுள்ளார். அதில் ஒரு கறவை மாடு விவசாய நிலத்தின் அருகிலிருந்த 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது.

இதனை பார்த்த தோட்டத்தின் அருகிலிருந்தவர்கள், பாலசுப்ரமணியத்திற்கு தகவல் அளித்தனர். கிணற்றில் தனது மாடு உயிருக்கு போராடுவதை பார்த்த அவர், உடனடியாக பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலையடுத்து சம்பவ இடம் வந்த தீயணைப்பு துறையினர், உடனடியாக மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தண்ணீரில் விழுந்ததால் மிரண்டிருந்த மாடு, முரண்டு பிடித்தது. இதனையடுத்து ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்த தீயணைப்பு வீரர்கள், இரண்டு மணி நேரம் போராடி மாட்டினை உயிருடன் மீட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com