தனியார் பால் நிறுவனங்கள் வழக்குகள் மூலம் பயமுறுத்த முயற்சிப்பதாகவும், அந்நிறுவனங்களின் பாலில் கலப்படம் செய்ததற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரின் வழக்கறிஞர் விஜய் தெரிவித்துள்ளார்.
நேற்று முன் தினம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் விஜய் என்பவர், ஆரோக்கியா, டோட்லா, விஜய் பால் ஆகியவற்றில் கலப்படம் இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனிடையே, வழக்கறிஞர் விஜய் காண்பித்த பாலின் தரம் தொடர்பான அறிக்கை தவறானது என்று பால்நிறுவனங்கள் குற்றம்சாட்டின. மேலும், ஆய்வு அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக ராஜேந்திர பாலாஜி தரப்பில் கூறியிருப்பதும் உண்மைக்கு புறம்பானது என கூறப்பட்டது. ஆரோக்கியா, டோட்லா, விஜய் பால் நிறுவனங்களின் தயாரிப்புகள் பாதுகாப்பானவை தான் அந்தந்த நிறுவனங்கள் அறிவித்தன.
இந்நிலையில் தனியார் பால் நிறுவனங்கள் வழக்குகள் மூலம் பயமுறுத்த முயற்சிப்பதாகவும், அந்நிறுவனங்களின் பாலில் கலப்படம் செய்ததற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரின் வழக்கறிஞர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.