கொரோனா பரவலைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருவதையடுத்து அச்சம் காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் ரயில்கள் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு போல் முழு பொதுமுடக்கம் அறிவித்துவிட்டால் சொந்த ஊர்களுக்குச் செல்ல சிரமம் ஏற்படும் என வெளிமாநிலத் தொழிலாளர்கள் கூறுகின்றனர். இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்வதற்காக அதிகளவில் வந்தனர்.
அதேபோல, கோவையில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களும் பாட்னா, தன்பாத் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்ய வந்திருந்தனர்.