பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.ராஜா செயல்பட இடைக்கால தடை

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.ராஜா செயல்பட இடைக்கால தடை
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.ராஜா செயல்பட இடைக்கால தடை
Published on

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா செயல்பட உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. 

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா செயல்பட்டு வந்தார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரபட்டது. இதில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி ஓ.ராஜா மற்றும் 16 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.  

இந்நிலையில் தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.ராஜா செயல்படுவதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. அத்துடன் தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் நிர்வாகக்குழு ஆகிய இரண்டு செயல்பட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து ஓ.ராஜா,  பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை பதிவாளர் உள்ளிட்ட 17 உறுப்பினர்களும் பதில் தர உத்தரவு விட்டுள்ளனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com