மேட்டூர் அணையில் இருந்து மீண்டும் விநாடிக்கு 2.05 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.
மேட்டூர் அணையில் நேற்று 2.05 லட்சம் நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 94 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. ஆனால் சில மணிநேரத்தில் நீர்வரத்து இரண்டு லட்சத்து ஐந்தாயிரம் கன அடியாக அதிகரித்ததால், அதே அளவு நீர் திறந்துவிடப்படுகிறது.
Read Also -> மொட்டை மாடியில் சிக்கித்தவித்த குழந்தை மீட்பு
தொடர் மழை காரணமாக 13 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக நீர் திறப்பது குறிப்பிடத்தக்கது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.85 அடியாக உள்ளது. நீர் இருப்பு 93.23 டிஎம்சியாக இருக்கிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 800 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சேலம் மாதையன்குட்டை பகுதிக்குட்பட்ட எம்ஜி.ஆர் நகர் பெரியார் நகர், அண்ணா நிகர், உள்ளிட்ட பகுதியில் உள்ள குடிநிருப்புப்பகுஇயில் வெள்ள நீர் புகுந்துள்ளது. வருவாய் துறையினர் மீட்கும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.