மேட்டூர் அணையின் நீர்திறப்பு 75 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணை 5 வருடங்களுக்குப்பிறகு முழுக்கொள்ளவை எட்டியுள்ளது. இதனால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு விவசாயப் பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. அத்துடன் அணைக்கு கர்நாடகாவில் இருந்து தற்போது வந்துகொண்டிருக்கும் உபரிநீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று இரவு 8 மணிக்கு நீர்திறப்பு 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.
இந்த நீர்திறப்பு அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டுக்கொண்டே வந்தது. இன்று இரவு 8 மணிக்கு 65,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 9 மணிக்கு இந்த நீர்திறப்பின் அளவு, 75 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இரவு 10 மணிக்கு நீர்திறப்பு 80 கனஅடியாக உயர்த்தப்படவுள்ளது. இதனால் காவிரிக்கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பன இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.