மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளது.
கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால் நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்துடன் பிலிகுண்டு மற்றும் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இன்று மதியம் அணையின் நீர்மட்டம் 86 அடியை தாண்டியது.
நீர்வரத்தும் 2 லட்சம் கனஅடியை தாண்டியது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளது. அத்துடன் ஒகேனக்கல் அணைக்கு விநாடிக்கு 2.80 லட்சம் கனஅடி நீர் வந்துகொண்டிருப்பதால், மேட்டூர் அணையின் நீர்வரத்தும் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளை காலைக்குள் 100 அடியை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.