"ஒவ்வொரு 2.5 நிமிடத்துக்கும் ஒரு ரயில்" சென்னை மெட்ரோவின் சோதனை முயற்சி

"ஒவ்வொரு 2.5 நிமிடத்துக்கும் ஒரு ரயில்" சென்னை மெட்ரோவின் சோதனை முயற்சி
"ஒவ்வொரு 2.5 நிமிடத்துக்கும் ஒரு ரயில்" சென்னை மெட்ரோவின் சோதனை முயற்சி
Published on

சென்னை மெட்ரோவில் சோதனை முயற்சியாக ஒவ்வொரு 2.5 நிமிடங்களுக்கும் ஒரு ரயில் விட திட்டமிட்டுள்ளனர். 

சென்னை மெட்ரோ பயணிகளை கவர பல முயற்சிகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் 10 ரூபாய்க்கு ஒரு கேப் சேவையை தொடங்கியது. அத்துடன் மின்சார வாகனங்கள் சார்ஜ் செய்யும் வசதியும் மெட்ரோ ரயில் நிலையத்தில் புதிதாக தொடங்கப்பட்டது. அந்தவகையில் தற்போது பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு மற்றொரு புதிய முயற்சியை எடுக்கவுள்ளது. 

அதன்படி இன்று மட்டும் சோதனை முயற்சியாக ஒவ்வொரு 2.5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்க திட்டமிட்டுள்ளது. பொதுவாக சென்னை மெட்ரோ ரயில் காலை 6 மணி முதல் 8.30 மணி வரை, காலை 10.30 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8.30 மணியிலிருந்து இரவு 10 மணி வரை ஆகிய நேரங்களில் மெட்ரோ ரயில் ஒவ்வொரு 7 நிமிடத்திற்கும் ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அத்துடன் கூட்ட நெரிசல் நேரமான காலை 8.30 மணியிலிருந்து 10.30 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை  ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு ரயில்  இயக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மெட்ரோ நிர்வாகம் சோதனை முயற்சியாக ரயில்களின் இடைவேளையை குறைத்துள்ளது. தற்போது சராசரியாக ஒரு நாளுக்கு 1 லட்சம் பேர் சென்னை மெட்ரோவில் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com