காலை 8 மணி நிலவரப்படி
“செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ நிலையத்தை சுற்றி 4 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் நிலையத்திற்குள் நுழைவதற்கான பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. பயணிகள் நிலையத்திற்கு வருவதை தவிர்த்துவிட்டு ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தொடர்ந்து பம்பிங் செய்யப்பட்டாலும் 2 சக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் தண்ணீர் தேங்கி தற்போது 4 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. இதனால் சில இருசக்கர வாகனங்களை உரிமையாளர்கள் விட்டுச் சென்றுள்ளனர். கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் முன்புறம் உள்ள சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ரோகிணி தியேட்டர் பக்கத்திலிருந்து ஃபுட் ஓவர் பிரிட்ஜ் (நடைபாதை) வழியாக ரயில் நிலையத்தை அணுகலாம்.
அரும்பாக்கம் ஸ்டேஷன் அருகே சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் செல்வதற்கு சிரமம் ஏற்படும். இது தவிர்த்து மற்ற நிலையங்கள் அணுகக் கூடியவையாக உள்ளது. தெரு மட்டத்தில் மட்டுமே சிறிய நீர் தேங்கி நிற்கிறது. ரயில் சேவைகள் வழக்கம் போல் காலை 5 மணிக்கு தொடங்கியது. பயணிகள் அதற்கேற்ப தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
CMRL குழு தனது பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்க கடுமையாக உழைத்து வருகிறது மற்றும் அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் அதன் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறது. மேலும் இது தொடர்பாக ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டாலோ அல்லது காலை 10 மணிக்குப் பிறகு அடுத்த அப்டேட் வழங்கப்படும்” என்று மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.