“விட்டுவிட்டு கனமழை? குறுகிய நேரத்தில் தீவிர மழைப்பொழிவு” - என்ன சொல்கிறார் சுயாதீன வானிலை ஆய்வாளர்?

சென்னையில் விட்டுவிட்டு மழை தொடரும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு விட்டு விட்டு மழை தொடரும்!
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு விட்டு விட்டு மழை தொடரும்! pt web
Published on

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பொழிவு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னையில் கிண்டி, கோடம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி விடியவிடிய பரவலாக மழை பெய்தது.

சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் மழை!
சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் மழை!pt web

தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அதிலும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு விட்டு விட்டு மழை தொடரும்!
சென்னையில் எந்தெந்த பகுதியில் எவ்வளவு மழை? முழு விவரம்!

இந்நிலையில் சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தொலைபேசி வாயிலாக மழை தொடர்பாக ‘புதிய தலைமுறை’க்கு சில அப்டேட்களை கொடுத்தார். அதன்படி அவர் கூறியதாவது,

“தென்மேற்கு வங்கக்கடலில் நிலவக்கூடிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று பிற்பகல் டெல்டா மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை கடற்கரையில் நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும் நாளையும் அதேபகுதியில் நிலவும்போது, வடகிழக்கு காற்றுக் குவிதல் வட கடலோர மாவட்டங்களில் விழத்தொடங்கும்.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு விட்டு விட்டு மழை தொடரும்!
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு விட்டு விட்டு மழை தொடரும்!

நேற்றிரவு சென்னையில் தொடங்கி இருக்கும் மழைப்பொழிவு வரக்கூடிய மணி நேரங்களில் படிப்படியாக தீவிரம் அடையும். இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு விட்டு விட்டு கனமழையை எதிர்பார்க்கலாம்.

நாளை காலை 8.30 மணிக்குள்ளாக மேற்கண்ட 4 மாவட்டங்களில் பரவலாக கன முதல் மிக கனமழை பதிவாகும். ஓரிரு இடங்களில் 10 முதல் 15 செமீ வரையிலான இடைப்பட்ட அளவிற்குள் அதி கனமழை பொழிவதற்கும் வாய்ப்பு உள்ளது. அச்சப்பட தேவையில்லை என்றாலும், ஓரிரு மணி நேரங்களில், அதாவது குறுகிய நேரத்தில் தீவிர மழைப்பொழிவாக இந்த மழைப் பொழிவு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு விட்டு விட்டு மழை தொடரும்!
ஸ்டெர்லைட் ஆலை மீதான தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய வேதாந்தா மனு: தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

அதேபோல இன்று பிற்பகல் முதல் புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் முதலான மாவட்டங்களிலும் மழையின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும்” என தெரிவித்தார்.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு விட்டு விட்டு மழை தொடரும்!
ஏகப்பட்ட அழுத்தம்.. வேறு வழியின்றி தவிக்கிறாரா இபிஎஸ்..? பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா? காரணம் என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com