ஒரே சமயத்தில் இரண்டு புயல்: தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்து 7 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் அடுத்த இரண்டு நாட்களில் வடகிழக்கு பருமழை தொடங்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.
rain
rainpt desk
Published on

அரபிக்கடலில் ஏற்கெனவே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று கூறப்படுகிறது. அந்த புயலுக்கு தேஜ் என்ற பெயரை வைக்க இந்தியாவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் மேலும் தீவிரமடைந்து தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain
Rainpt desk

அதேபோல் வங்கக்கடல் பகுதியிலும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 23 ஆம் தேதி காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் மிதமான மழையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முழு தகவலை கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com