“ஜூன் 2ஆம் தேதி வரை இதே நிலைதான்” - வெயில் தொடர்பாக வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில், அடுத்த 5 நாட்கள் வெயில் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு கடும் வெயில்
தமிழ்நாட்டிற்கு கடும் வெயில்pt web
Published on

வங்கக்கடலில் உருவான புயல் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வந்தது. தற்போது புயல் மேற்கு வங்கத்தில் கரையை கடந்த நிலையில், தமிழகத்தின் வடமாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகளவாக சென்னை மீனம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் தலா 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டிற்கு கடும் வெயில்
வெயிலில் கொதிக்கப்போகும் சென்னை... பிரதீப் ஜான் கணிப்பு! வட மாநிலங்களில் என்ன நிலவரம்?

வரும் ஜூன் 2ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இதே நிலை நீடிக்கும் என்றும், 2 முதல் 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com