இன்றும் மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் 

இன்றும் மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் 
இன்றும் மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் 
Published on

தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கர்நாடகப்பகுதிகளில் வலுவாக உள்ளது. நேற்று தமிழக பகுதிகளில் நிலவி வந்த வலிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து இன்று நிலவுகிறது. இதன்காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு வட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழை பொறுத்தவரையில், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவுப்படி அதிகபட்சமாக திரிபுவனத்தில் 9 செ.மீ மழையும் ஆரணி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ மழையும் உத்திரமேரூரில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. 

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில், ஓரிரு முறை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தென்மேற்கு பருவமழை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஜூன் 1 முதல் இன்றுவரையில் பதிவான மழையின் அளவு 89 மி.மீட்டர். ஆனால் இந்த காலகட்டத்தின் இயல்பு அளவு 117 மி.மீட்டர். வழக்கத்தை விட மழையின் அளவு 24 சதவீதம் குறைவாகவே உள்ளது” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com