முதலமைச்சரே சேப்பாக்கத்தில் தான் உண்ணாவிரதம் இருந்தார் - மெரினா வழக்கில் தமிழக அரசு

முதலமைச்சரே சேப்பாக்கத்தில் தான் உண்ணாவிரதம் இருந்தார் - மெரினா வழக்கில் தமிழக அரசு
முதலமைச்சரே சேப்பாக்கத்தில் தான் உண்ணாவிரதம் இருந்தார் - மெரினா வழக்கில் தமிழக அரசு
Published on

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரே, சேப்பாக்கத்தில் தான் போராடியதாக மெரினா போராட்டம் தொடர்பான மேல்முறையீட்டில் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு,  மெரினாவில் 90 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், ஒருநாள் மட்டும் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக இன்று மாலையே விசாரிக்கப்பட்டது.

இதில் வாதிட்ட அரசு தரப்பு, ‘2003லிருந்து மெரினாவில் போராட யாரையும் அனுமதிப்பதில்லை. முதல்வர், துணை முதல்வரே சேப்பாக்கத்தில்தான் உண்ணாவிரதம் இருந்தனர். தனி நீதிபதி உத்தரவு தவறான முன் உதாரணம் ஆகிவிடும். இந்த உத்தரவை அனுமதித்தால், 25 அமைப்புகள் நாளை போராட்டம் நடத்த காத்திருக்கிறது. மூன்று இடங்கள் போராட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை இருப்பதைப்போல், இடத்தை முடிவு செய்கிற அதிகாரம் சென்னை மாநகர காவல் சட்டத்தின் படி காவல் ஆணையருக்கே உள்ளது. நாங்கள் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கவில்லை. இடத்தைதான் தீர்மானிக்கிறோம்.
 
அதிகாலையில் பலர் உறங்குகிறார்கள். நீச்சல் குளம் பலராலும் பயன்படுத்தப்படுகிறது. மீனவர்களும் அப்பகுதியை
பயன்படுத்துகிறார்கள். சென்னை மாநகராட்சி மூலம், மெரினா சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகமாக
பயப்படுத்தும் இடம் மெரினா. ஒருவருக்கு அனுமதி கொடுத்தால், ஒவ்வொருவராக வருவார்கள். கடந்த ஆண்டு அனுமதியில்லாமல் சிலர் கூடி,  அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து பெரிய அளவிலான கூட்டமகா மாறியது’ எனக் கூறியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com