சீர்காழியில் அதிர்ச்சி: இறந்த தாயின் உடலை புதைத்துவிட்டு அருகிலேயே அமர்ந்திருந்த மகன்

சீர்காழியில் அதிர்ச்சி: இறந்த தாயின் உடலை புதைத்துவிட்டு அருகிலேயே அமர்ந்திருந்த மகன்
சீர்காழியில் அதிர்ச்சி: இறந்த தாயின் உடலை புதைத்துவிட்டு அருகிலேயே அமர்ந்திருந்த மகன்
Published on

சீர்காழி அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்த தாயின் உடலை வீட்டிற்குள் புதைத்துவிட்டு அருகிலேயே மனநிலை பாதிக்கப்பட்ட மகன் அமர்ந்து இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த புதுப்பட்டினம் திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இந்திராணி(65). இவரது மகன் பிரபாகரன்(35). பிரபாகரன் கடந்த 3 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வருகிறார். இவர்கள் தங்களுக்கு சொந்தமான கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இந்திராணி நேற்று முதல் காணவில்லை என கூறப்படுகிறது. இன்றும் அவர் வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அருகில் வசிப்பவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த அறையில் ஒரு குழி தோண்டப்பட்டு மூடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் புதுப்பட்டினம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் அங்கு மண்ணைத் தோண்டி பார்த்தபோது அதற்குள் இறந்த நிலையில் இந்திராணி சடலமாக கிடந்தது தெரியவந்தது. உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இந்திராணி இறந்த நிலையில் என்ன செய்வது என்று தெரியாத மனநலம் பாதிக்கப்பட்ட மகன் பிரபாகரன் வீட்டிற்குள்ளேயே குழிதோண்டி தாயின் உடலை புதைத்துவிட்டு அதன் அருகிலேயே அமர்ந்து இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து இந்திராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்த போலீசார் அவரது மகனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com